search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பேசிய காட்சி.
    X
    நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பேசிய காட்சி.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு கண்டனம்- நெல்லையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு கண்டனம் தெரிவித்து நெல்லையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    நெல்லை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கணடித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டி யன் கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பேசியதாவது:-

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. ஆட்சியில் இருப்பதால், அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அ.தி.மு.க. சார்பாக வெற்றி பெற்ற கவுன்சிலர்களையும் அவர்கள் மிரட்டி தங்கள் பக்கம் இழுக்கிறார்கள்.

    அனைத்து பதவிகளையும் கைப்பற்ற எந்த நிலைக்கும் செல்ல தி.மு.க.வினர் தயாராக இருக்கிறார்கள். அடக்குமுறையை ஏவி அ.தி.மு.க.வை அடக்க முடியாது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும். அப்போது இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. எந்த ஆயுதத்தை அவர்கள் எடுக்கிறார்களோ அந்த ஆயுதமே அவர்களை தாக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்குப் போடுவதை நிறுத்த வேண்டும். அ.தி.மு.க.வினர் மீது கை வைத்தால் அது உங்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்.

    இன்று அ.தி.மு.க.வில் இருந்து சென்ற பலரை வைத்து தான் நீங்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும்.

    பொங்கலுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.2500 வழங்காமல் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற் றிருக்கிறீர்கள். இந்த வெற்றி நீண்டநாள் நிலைக்காது. இவ்வாறு அவர் கூறினார்

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.பி. முத்துகருப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×