என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கால்நடை மருத்துவ முகாம்
Byமாலை மலர்27 Feb 2022 3:49 PM IST (Updated: 27 Feb 2022 3:49 PM IST)
மேலூர் அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
மேலூர்
மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூஞ்சுத்தி ஊராட்சி மீனாட்சிபுரத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் தலைமையில் நடந்தது.
கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சுண்டுவாத அறுவை சிகிச்சை, மலட்டு நீக்க சிகிச்சை, செயற்கைமுறை கருவூட்டல், சினை பரிசோதனை, அறுவை சிகிச்சை, தடுப்பூசி பணி, உள்ளிட்ட சிகிச்சைகள் இலவசமாகவும், தீவனபயிர், மற்றும் தீவனப்புல் சாகுபடி குறித்து கால்நடை மருத்துவ பேராசிரியர்கள் மூலம் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கன்று பேரணிகள் நடத்தப்பட்டு சிறந்த கிடேரி கன்றுகளுக்கும், சிறந்த முறையில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடை உதவி மருத்துவர் ராமலட்சுமி, கால்நடை ஆய்வாளர் பாத்திமா, பராமரிப்பு உதவியாளர் பிரேமலதா, ஆவின் பணியாளர்கள் சரவணன், கோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×