என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
திருச்சி மாவட்டத்தில் 1,569 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
Byமாலை மலர்27 Feb 2022 3:16 PM IST (Updated: 27 Feb 2022 3:16 PM IST)
திருச்சி மாவட்டத்தில் இன்று 1,569 முகாம்களில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 146 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்ட கலெக்டர் சு.சிவராசு இன்று பெரிய மிளகுபாறை நகர் நல மையத்தில், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:
திருச்சி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் 1,279 மையங்களிலும், திருச்சி மாநகராட்சியில் 247 மையங்களிலும், துறையூர் நகராட்சியில் 20 மையங்களிலும், மணப்பாறை நகராட்சியில் 23 மையங்களிலும் என மொத்தம் 1,569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இன்று (27.02.2022) பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. மேலும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து நகர்நல மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் ஆகிய கோவில்கள், மசூதிகள் தேவாலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையம், முக்கொம்பு போன்ற சுற்றுலா தலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க 55 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் அவர்களுக்கு 69 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
மேலும் ரெயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியிலிருந்து செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரெயில்களில் இன்று ரெயில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன்று கிராமப்புறங்களில் 1,51,608 குழந்தைகளுக்கும், நகர்ப்புறங்களில் 83,156 குழந்தைகளுக்கும், ஆக மொத்தம் 2,34,764 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இடம் பெயர்ந்து குடியிருப்போர் மற்றும் நாடோடிகளின் குழந்தைகள் 382 பேர்களுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஆக மொத்தம் திருச்சி மாவட்டத்தில் 2,35,146 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X