என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்.
  X
  கோப்புபடம்.

  பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
  நன்னிலம்:

  திருவாரூர் மாவட்டம், வலங்கைமான், ஊத்துக்காடு, நடுத்தெருவை சேர்ந்தவர் ராசு மகள் ரேணுகா (வயது28). மாத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் வினோத் (35). இந்நிலையில் பி.ஏ படித்த ரேணுகா 
  2017 ம் ஆண்டு திருப்பூரில் சென்று வேலை பார்த்துள்ளார். 

  அப்பொழுது வினோத்குமார் அடிக்கடி சென்று ரேணுகாவை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து வினோத், ரேணுகாவிடம், நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறினார். 

  இதனை உண்மை என்று நம்பிய ரேணுகா அவரிடம் பழகி வந்தார். இதனை பயன்படுத்தி வினோத் ஆசை வார்த்தைகள் கூறி ரேணுகாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

  இந்நிலையில் வினோத் நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என கூறிவிட்டு, செல்போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளார். 

  இதனால் அதிர்ச்சியடைந்த ரேணுகா, வினோத் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் வினோத் ஆத்திரம் அடைந்து ரேணுகாவை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

  இது குறித்து ரேணுகா நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.
  Next Story
  ×