என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை
Byமாலை மலர்27 Feb 2022 2:52 PM IST (Updated: 27 Feb 2022 2:52 PM IST)
நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் ஏராளமான இடங்களில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைவதாக புகார்கள் வந்தது.
இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில் மாநகரப் பகுதி முழுவதும் நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்கள் பிடிக்கப்பட்டன.
அங்குள்ள மீனாட்சிபுரம், சி.என். கிராமம், ரெயில் நிலையம், கண்ணம்மன் கோவில் தெரு, சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்தனர்.
தொடர்ந்து அவற்றை ஸ்ரீபுரத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சந்திப்பு பகுதியில் நாய் பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார ஆய்வாளர்கள் முன்னி லையில் மதுரையை சேர்ந்த நாய் பிடிக்கும் தனியார் அமைப்பை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நாய்களை வலைவீசி பிடித்தனர்.
அங்குள்ள மீனாட்சிபுரம், சி.என். கிராமம், ரெயில் நிலையம், கண்ணம்மன் கோவில் தெரு, சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்தனர்.
தொடர்ந்து அவற்றை ஸ்ரீபுரத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
Next Story
×