என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
திருச்சி, பெரம்பலூர் கோவில் பகுதிகளில் ரூ.5 கோடி நிலுவைத்தொகை வசூல்
Byமாலை மலர்27 Feb 2022 2:46 PM IST (Updated: 27 Feb 2022 2:46 PM IST)
திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட கோவில் பகுதிகளில் கடைகளில் பாக்கி வைத்திருந்த ரூ.5 கோடி நிலுவைத்தொகையினை அதிகாரிகள் வசூல் செய்தனர்.
திருச்சி:
தமிழகத்தில் கோவில் நிலங்களுக்கு சொந்தமான வாடகை பாக்கியை வசூல் செய்ய இந்து அறநிலையத் துறை சார்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்திலும் கோவில் நிலங்களில் கடைகள் மற்றும் ஓட்டல்கள் நடத்தி வரும் உரிமையாளர்களிடம் அதன் வாடகை பாக்கி நிலுவைத்தொகையை வசூல் செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக திருச்சியை பொருத்தமட்டில் என்.எஸ்.பி. சாலையில் அமைந்துள்ள மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இரண்டு கோவில்களும் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது.
இந்த கோவில்களை சுற்றி பல்வேறு கடைகள் கோவில் நிலங்களில் செயல்பட்டு வருகின்றன. அதனைத்தொடர்ந்து அந்த கடைகளை பயன்படுத்தும் உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் நிலுவையாக இருந்து வருகிறது.
இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதனை வேகமாக வசூல் செய்ய வலியுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அதிகாரிகளும் நோட்டீஸ் அனுப்பி வருகிறார்கள்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருச்சி, பெரம்பலூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் அமைந்துள்ள கோவில்களில் வாடகை பாக்கி மட்டும் ரூ.71 கோடி வந்துசேர வேண்டும். அதற்காக அதிகாரிகள் தீவிரமாக கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை பயன்படுத்த வருடந்தோறும் வரித்தொகையை வசூல் செய்து வருகின்றனர்
அந்த வகையில் இந்த பிப்ரவரி மாதத்தில் முதல் இரண்டு வாரத்தில் ரூ.2.5 கோடி வசூலாகியுள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில் ரூ.5 கோடி நிலுவை தொகை வசூலாகியுள்ளது. மேலும் மொத்தம் இந்த மாதத்தில் மட்டும் ரூ.7.48 கோடி வசூலாகியுள்ளது.
இன்னும் சில காலங்களில் வரவேண்டிய அனைத்து தொகையையும் வசூல் செய்து விடுவோம். மலைக்கோட்டை கோவில் பொருத்தமட்டில் 6 ஆண்டு காலமாக ரூ.6 கோடி வசூல் ஆக வேண்டியுள்ளது. அதையும் வேகமாக வசூல் செய்துவிடுவோம் என்று தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X