search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஏலகிரி மலையில் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்
    X
    ஏலகிரி மலையில் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்

    ஏலகிரி மலை நிலாவூரில் குடிநீர் வசதி ஏற்பாடு - அதிகாரி ஆய்வு

    ஏலகிரி மலை நிலாவூரில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யும் பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். 

    கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கிராம ஊராட்சிகளின் அடிப்படை வசதிகளை நிர்வகிக்கப்பட்டு வந்தது. 

    இந்நிலையில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று கிராம ஊராட்சிகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக் கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஊராட்சி மன்ற நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    அதனடிப்படையில் ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமங்களிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

    இந்நிலையில் நிலாவூர் பகுதியில் உள்ள கிழப்பாறை வட்டம், நரிய வட்டம், ஊர்மணிவட்டம், பிள்ளையார் வட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

    இந்நிலையில் இங்குள்ள மக்களுக்கு பல ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர். 

    அதனடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நேற்று மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் குடிநீர் வசதி ஏற்படுத்த பல்வேறு இடங்களை நேற்று ஆய்வு மேற்கொண்டார். 

    அதில் நிலாவூர் ஆலமரத்து வட்டம் பகுதியில் இருந்து பைப் லைன் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

    மேலும் ஆலமரத்து வட்டத்திலிருந்து வழியாக மேட்டுக்காடு வட்டத்திற்கு வரை சென்று அங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாடு இல்லாமல் இருந்து வந்தது. 

    இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனையும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். 

    பின்னர் நிலாவூர் அருகே உள்ள ஆலமரத்து வட்டம் பகுதியிலிருந்து ஆழ்துளை கிணறு மூலம் பைப் லைன் அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். 

    மேலும் இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன், துணைத்தலைவர் திருமால், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×