என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சேலம் மார்க்கெட்டுகளில் தக்காளி ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை
சேலம்:
சேலத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு எடப்பாடி, மேட்டூர், மேச்சேரி, சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி, கெங்கவல்லி மற்றும் ஈரோடு, ஒட்டன் சத்திரம், கோவை, நீலகிரி, தருமபுரி, பெங்களூரு, மகராஷ்டிரா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப் படுகின்றன.
இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், பொது மக்கள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். இதற்கிடையே காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளது.
குறிப்பாக கடந்த மாதம் 15 ரூபாய்க்கு விற்ற தக்காளி ஒரு கிலோ தற்போது 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.
உருளை கிழங்கு ஒரு கிலோ ரூ. 28, சின்ன வெங்காயம் ரூ. 25, பெரிய வெங்காயம் ரூ. 40, பச்சை மிளகாய் 60, கத்திரிக்காய் ரூ. 20, வெண்டைக்காய் ரூ. 10, முருங்கைக்காய் ரூ. 80, பீர்க்கங்காய் ரூ. 18, சுரக்காய் ரூ. 8, புடலங்காய் ரூ. 12, பாகற்காய் ரூ. 22, தேங்காய் ரூ. 30, முள்ளங்கி ரூ. 8, பீன்ஸ் ரூ. 26, அவரை ரூ. 26, கேரட் ரூ. 100, வாழைப்பழம் ரூ. 20, கீரைகள் ரூ. 20, பப்பாளி ரூ. 20, கொய்யா ரூ. 40, மாதுளை ரூ. 220, ஆப்பிள் ரூ. 140, சாத்துக்குடி ரூ. 90-க்கும் விற்பனையாகிறது.
கடந்த மாதத்தை விட காய்கறிகள் வரத்து அதிகரித்த நிலையில் தேவை குறைந்ததால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.