search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு காணொலி மூலம் ஆசிரியர்கள் பயிற்சி

    பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு காணொளி வாயிலாக ஆசிரியர்கள் பயிற்சியளித்தனர்.
    உடுமலை:

    தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் 2016-17ம் கல்வியாண்டு முதல் பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் பிற பள்ளிகளில் உள்ள வசதிகள், கற்றல்- கற்பித்தல் நிகழ்வுகளை தெரிந்து கொள்வார்கள். 

    களப்பயணமாக அந்த பள்ளியை சுற்றியுள்ள வளங்கள், வரலாற்றுச்சிறப்புமிக்க இடங்கள், இயற்கை சூழல்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை பார்த்து தெரிந்து கொள்வார்கள். '

    பெருந்தொற்று காலத்தில் இருந்து இத்திட்டத்தை இணைய வழியில் செயல்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அவ்வகையில்  சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 6,7,8ம் வகுப்புகளை சேர்ந்த 15 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சியளித்தனர். 

    பள்ளி தலைமையாசிரியர் கோப்பெருந்தேவி திட்டத்தை துவக்கி வைத்தார்.

    பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், சிவக்குமார், செல்வி ஆகியோர் இயற்கை வளங்கள், தொழிற்சாலைகள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் குறித்து, ‘லேப்டாப்’பில், ‘பவர் பாயின்ட்’ தொழில்நுட்பம் வாயிலாக விளக்கமளித்தனர். 

    தொடர்ந்து 2 பள்ளி மாணவ, மாணவிகளும் காணொளி வாயிலாக  கலந்துரையாடினர். இத்திட்டத்துக்காக கல்வித்துறையினர் பிரத்யேகமாக தயாரித்துள்ள வீடியோவை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழியிலான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிக் கட்டகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பள்ளித்தலைமைப் பண்பு மற்றும் பள்ளி அளவிலான மதிப்பீடு எனும் இரு கட்டகங்கள் சார்ந்த வீடியோ பதிவுப்பணி தொடங்கியது.காணொலி தயாரிப்பதற்கான வீடியோ பதிவினை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் தொடங்கி வைத்தார். 

    இப்பணிமனையின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கருத்தாளர்களாகப் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் பாபிஇந்திரா, சுப்பிரமணி, சரவணகுமார் ஆகியோர் செயல்படுகின்றனர்.

    காணொலி தயாரிக்கும் வீடியோ பதிவில் ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை மணிமேகலை, உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சின்னராசு, விஜயலட்சுமி, அருள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சுபத்ரா, திருமூர்த்திநகர் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இவர்கள் இப்பணிமனையில் கலந்துகொண்டு தங்களுக்கான காணொலிகளைப் பதிவுசெய்தனர்.
    Next Story
    ×