என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பின்னலாடை உற்பத்திக்கான துணைப்பொருட்களை திருப்பூரிலேயே தயாரிக்க திட்டம்
Byமாலை மலர்27 Feb 2022 8:59 AM IST (Updated: 27 Feb 2022 8:59 AM IST)
திருப்பூரில், பின்னலாடை உற்பத்தி உட்பட பல்வேறு தொழில் துறைகளில் புதிய தொழில்முனைவோரை கால்பதிக்க செய்ய வேண்டும்.
திருப்பூர்:
லகு உத்யோக் பாரதி சார்பில் திருப்பூரில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. லகு உத்யோக் பாரதி மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் வாரிய உறுப்பினரும், லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலாளருமான மோகனசுந்தரம் பேசியதாவது:-
திருப்பூரில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஆடை தயாரிப்புக்கு தேவையான பட்டன், ஜிப், லேபிள் போன்ற பல்வேறு வகை துணை பொருட்களை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தே கொள்முதல் செய்கின்றன. குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோரை உள்ளூரிலேயே ‘அக்சசரீஸ்’ உற்பத்தி நிறுவனங்களை உருவாக்க ஊக்கப்படுத்தவேண்டும்.
லகு உத்யோக் பாரதி மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை கைகோர்த்து திருப்பூரின் புறநகர் பகுதியில் ‘அக்சசரீஸ்’ உற்பத்திக்கான பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான துணை பொருட்கள் எளிதாக கிடைக்கும். குறு, சிறு, நடுத்தர தொழில் துறை வளர்ச்சி பெறும். ஏராளமானோர் புதிதாக வேலைவாய்ப்பு பெறுவர். அடுத்த 5 ஆண்டுகளில் குறு, சிறு, நடுத்தர உற்பத்தி துறை மிகப்பெரிய வளர்ச்சி வெறும்.
வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பதில் குறு, சிறு தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தி, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
திருப்பூரில், பின்னலாடை உற்பத்தி உட்பட பல்வேறு தொழில் துறைகளில் புதிய தொழில்முனைவோரை கால்பதிக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோவை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு பயிற்சி மைய இணை இயக்குனர் பழனிவேல், உதவி இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் பொது பயன்பாட்டு மையம் அமைப்பது குறித்து விளக்கி பேசினர்.
மாவட்ட முன்னோடி வங்கி கனரா மேலாளர் அலெக்சாண்டர், மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் சந்திரசேகரன், ‘டான் சிட்கோ’ கிளை மேலாளர் சர்மிளா உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர், ஆடை உற்பத்திக்கான ‘அக்சசரீஸ்’ தயாரிப்புக்கு பொது பயன்பாட்டு மையம் அமைப்பது குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
Next Story
×