search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 3,350 பயனாளிகளுக்கு ரூ.14.33 கோடி திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் : கலெக்டர் அரவிந்த் தகவல்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 3,350 பயனாளிகளுக்கு ரூ.14.33 கோடி திருமண நிதியுதவியும் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
    ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும். இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற் குட்பட்ட 160 பட்டதாரி பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.80 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவியும், 45 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.11.25 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவியும்,

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 400 பட்டதாரி பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.2 கோடி திருமண நிதியுதவியும், 70 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.17.50 இலட்சம் திருமண நிதியுதவியும், 

    தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட 100 பட்டதாரி பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.50 லட்சம் திருமண நிதியுதவியும், 83 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.20.75 லட்சம் திருமண நிதியுதவியும்,

    கிள்ளியூர் ஒன்றியத்திற்குட்பட்ட 240 பட்டதாரி பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.1.20 கோடி திருமண நிதியுதவியும், 130 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.32.50 லட்சம் திருமண நிதியுதவியும்,

    முஞ்சிறை ஒன்றியத்திற்குட்பட்ட 340 பட்டதாரி பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.1.70 கோடி திருமண நிதியுதவியும், 160 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.40 லட்சம் திருமண நிதியுதவியும்,

    மேல்புறம் ஒன்றியத்திற்குட்பட்ட 300 பட்டதாரி பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.1.50 கோடி திருமண நிதியுதவியும், 140 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.35 லட்சம் திருமண நிதியுதவியும், 

    குருந்தன்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட 210 பட்டதாரி பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.1.05 கோடி திருமண நிதியுதவியும், 97 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.24 லட்சம் திருமண நிதியுதவியும், 

    திருவட்டார் ஒன்றியத்திற்குட்பட்ட 220 பட்டதாரி பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.1.10 கோடி திருமண நிதியுதவியும், 80 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.20 இலட்சம் திருமண நிதியுதவியும், 

    ராஜாக்கமங்கலம் ஒன்றியத் திற்குட்பட்ட 170 பட்டதாரி பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.85 லட்சம் திருமண நிதியுதவியும், 68 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.17 லட்சம் திருமண நிதியுதவியும், 

    தக்கலை நகராட்சிக்குட்பட்ட 240 பட்டதாரி பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.1.20 கோடி திருமண நிதியுதவியும், 97 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.24 லட்சம் திருமண நிதியுதவியும் என மொத்தம் 2,380 பட்டதாரி பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.11.90 கோடி திருமண நிதியுதவியும், 970 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும், ரூ.2.43 கோடி திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. 
    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×