என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கனிமொழி
  X
  கனிமொழி

  உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு- கனிமொழி பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உக்ரைன் நாட்டில் போர் நடந்து வருவதால் அங்குள்ள தமிழகத்தை சேர்ந்த மாணவர்களை மீட்பது குறித்து மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

  கோவில்பட்டி:

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியை அடுத்துள்ள துறையூரில் ஒரு பட்டாசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

  இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். நேற்று முன்தினம் பட்டாசு ஆலையில் திடீரென பட்டாசு வெடித்து ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது.

  அதில் ஈராய்ச்சி மேலத் தெருவைச் சேர்ந்த ராமர் (63), ஜொட்டாம்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் (52), சிவந்திபட்டி குமாரபுரம் வடக்கு தெருவை சேர்ந்த தங்கவேல் (45), நாலாட்டின்புதூரை சேர்ந்த கண்ணன் என்ற மாடமுத்து (54) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

  இந்த விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் பிரபாகரன், மேலாளர் சீனிவாசன், மேற்பார்வையாளர்கள் திருநாவுக்கரசு, சூசை மிக்கேல் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.

  இதைத்தொடர்ந்து பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் சந்தித்து இன்று ஆறுதல் கூறினர்.

  மேலும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணநிதி ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினர். அப்போது மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடனிருந்தனர்.

  பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  கோவில்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண தொகை வழங்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  அதன்படி பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து இன்று ஆறுதல் கூறினோம். மேலும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 3 லட்சம் நிவாரண தொகையையும் வழங்கி உள்ளோம்.

  தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக உள்ளதா? என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் சரியாக உள்ளது. கோவில்பட்டியில் இது போன்ற விபத்துகள் நடந்தது இல்லை. இந்த விபத்து உண்மையிலேயே எதிர்பாராத ஒன்று.

  உக்ரைன் நாட்டில் போர் நடந்து வருவதால் அங்குள்ள தமிழகத்தை சேர்ந்த மாணவர்களை மீட்பது குறித்து மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் மாணவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான செலவையும் தமிழக அரசு ஏற்கும் எனவும் அறிவித்துள்ளார்.

  தற்போதைய நிலையில் உக்ரைனில் இருந்து விமானத்தை இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே இந்திய மாணவர்களை பக்கத்து நாட்டிற்கு அழைத்து சென்று அங்கிருந்து விமானம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதையும் படியுங்கள்... உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்களை சந்திக்கும் ராகுல் காந்தி

  Next Story
  ×