search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    களக்காட்டில் ஒற்றை இலக்கத்தில் ஓட்டுகள் பெற்ற அரசியல் கட்சி வேட்பாளர்கள்

    களக்காடு நகராட்சியில் நடந்து முடிந்த தேர்தலில் முக்கிய கட்சிகளான அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர் ஒற்றை இலக்கத்தில் ஓட்டுகள் பெற்றுள்ளனர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சி 2-ம் வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பால்ராஜ் 5 ஓட்டுகளும், 3-ம் வார்டில் பா.ஜ.க.சார்பில் போட்டியிட்ட குமார் 6 ஓட்டுள் மட்டுமே பெற்றுள்ளனர்.

    12-ம் வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் களம் இறங்கிய குமார் 6 ஒட்டுகளும், 13-ம் வார்டில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஜெயக்குமார் 3 ஓட்டுகளும், 14-ம் வார்டில் பகுஜன் சமாஜ் வேட்பாளராக களத்தில் இறங்கிய ராஜ்குமார் 6 ஓட்டுகள் பெற்றுள்ளனர்.

    17-ம் வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட முகம்மது உஸ்மான் 4 ஒட்டுகளும், 19-ம் வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்ட கணேசன் 4 ஓட்டுகளும், 20-ம் வார்டில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட புஷ்பலீலா 3 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

     21-ம் வார்டில் அ.ம.மு.க. வேட்பாளரான இசைவாணி 7 ஓட்டுகளும், 22-ம் வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கிய மெசில்டா 6 ஓட்டுகளும், 25-ம் வார்டில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தேவிகா 6 ஓட்டுகளும், அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மேகலா 6 ஓட்டுகளும் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.

    இவர்கள் தங்களது டெபாசிட் தொகையையும் பறிகொடுத்துள்ளனர்.

    முக்கிய கட்சிகளாக அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜ.க. வினர் ஒற்றை இலக்கத்தில் ஓட்டுகள் பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×