search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் திருமாவளவன் சந்திப்பு: வெற்றிப்பெற்ற வேட்பாளர்களுடன் வாழ்த்துப் பெற்றார்

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோகமாக வெற்றிப்பெற்றன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கணிசமான எண்ணிக்கையில் வெற்றிப்பெற்றது.
     
    இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அக்கட்சி வேட்பாளர்களும் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றனர்.

    இதையும் படியுங்கள்.. பெண்களுக்கு 50 சதவீத வார்டு ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்
    Next Story
    ×