search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாம் தமிழர் கட்சி
    X
    நாம் தமிழர் கட்சி

    தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு 6 இடங்களே கிடைத்தது

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு பேரூராட்சியில் மட்டுமே 6 இடங்கள் கிடைத்துள்ளது.
    சென்னை:

    ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    மாநகராட்சி, நகராட்சி வார்டுகளில் அந்த கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மாநகராட்சி, நகராட்சியில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி தோல்வியை தழுவியது.

    அந்த கட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சியில் மட்டுமே 6 இடங்கள் கிடைத்தது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 5 பேரூராட்சி வார்டுகளில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றது. இரணியல் (1-வது வார்டு), கப்பியரை (1-வது வார்டு), கல்லுக்கூட்டம் (8 மற்றும் 10-வது வார்டு), மருங்கூர் (10-வது வார்டு) ஆகிய பேரூராட்சிகளில் 5 வார்டுகளை கைப்பற்றியது.

    தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் 10-வது வார்டில் நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி கிடைத்தது.

    மாநகராட்சி, நகராட்சி வார்டுகளில் அந்த கட்சியை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒரு இடம்கூட கிடைக்காதது பரிதாபமே. அதிக பேரூராட்சி இடங்கள் இருந்தபோதிலும்கூட அந்த கட்சிக்கு வெறும் 6 வார்டுகளே கிடைத்துள்ளது.
    Next Story
    ×