search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லை மாநகராட்சியில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிய சுயேட்சை, கட்சி வேட்பாளர்கள்

    நெல்லை மாநகராட்சியில் சில வார்டுகளில் பிரதான கட்சியான அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிவிட்டு மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., சுயேட்சை வேட்பாளர்கள் 2-வது இடம் பிடித்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 40-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வில்சன் மணித்துரை 1,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ் 145 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. 

    அதே நேரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான டாக்டர் பிரேம் நாத் அ.தி.மு.க. வேட்பாளரை பின்னுக்கு தள்ளி 2-வது இடம் பிடித்தார். அவர் மொத்தம் 837 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதே போல் 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர்  ராஜூ 3,027 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் மாசானம் 262 வாக்குகள் மட்டுமே பெற்று  3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 

    அங்கு பா.ஜனதா வேட்பாளர் கைலாசம் கதிரேசன் 296 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.
     
    இதே போல் 6-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர்  பவுல்ராஜ் 2,613 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அங்கும் அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

    அந்த வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ஜெனி 528 வாக்குகள் மட்டுமே பெற்றார். சுயேட்சை வேட்பாளரான கந்தசாமி 978 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்தார். 

    12-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கோகுலவாணி வெற்றி பெற்றார். இங்கு அ.தி.மு.க. வேட்பாளரை பின்னுக்கு தள்ளி தே.மு.தி.க. வேட்பாளர் 2-வது இடம் பிடித்தார்.

     13-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சங்கர் குமார் வெற்றி பெற்றார். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் பால்கண்ணனை பின்னுக்கு தள்ளி சுயேட்சை வேட்பாளர் கொப்பறை சுப்பிரமணியன் 2-வது இடம் பிடித்தார்.
    Next Story
    ×