search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொக்கலிங்கபுரத்தில் தென்னையில் வெள்ளை ஈக்கள் கட்டுப்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.
    X
    சொக்கலிங்கபுரத்தில் தென்னையில் வெள்ளை ஈக்கள் கட்டுப்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.

    சாத்தான்குளம் அருகே தென்னையில் வெள்ளை ஈக்கள் கட்டுப்பாடு குறித்த பயிற்சி

    சாத்தான்குளம் அருகே சொக்கலிங்கபுரத்தில் தென்னையில் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டார வேளாண்மைத்துறை மற்றும் கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து சொக்கலிங்கபுரத்தில் தென்னையில் வெள்ளை ஈக்கள் கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 

    பயிற்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி  தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் சுஜாதா முன்னிலை வகித்தார். 

    இதில் கிள்ளக்குளம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, அபர்ணா, அபிநயா, ஐஸ்வர்யாஸ்ரீ, கவிப்பிரியா, பின்னு, முல்லை ஆகியோர் பங்கேற்று தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதலில் இருந்து  பாதுகாப்பதற்கு 
    1 கிலோ மைதாவை 6 லிட்டர் தண்ணீருடன் கலந்து  தெளிக்க வேண்டும் எனவும், 

    தென்னை மரத்தின் ஒளிச்சேர்க்கை  பாதிப்பதால் விளைச்சல் குறைவதை கட்டுப்படுத்துவது குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். இதில் விவசாயிகள், வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×