என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பதக்கம் வென்ற மாணவனுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்ட காட்சி.
  X
  பதக்கம் வென்ற மாணவனுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்ட காட்சி.

  நேபாளத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் செங்கோட்டை அரசு பள்ளி மாணவனுக்கு தங்கப்பதக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9&ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் நேபாள நாட்டில் நடந்த குத்துச்சண்டையில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றார்.
  செங்கோட்டை:

  செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ஆத்திப் இவர் நேபாள நாட்டில் நடைபெற்ற யூத் கேம் இண்டர் நேஷனல் சாம்பியன்ஷிப் சார்பில் 2022 ஆண்டிற்கான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டார்.

   போட்டியில் 36 முதல் 38 எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று தாய்நாட்டிற்கும் தான் படிக்கும் பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளார்.

  தங்கப் பதக்கம் வென்ற மாணவன் ஆத்திப்புக்கு பள்ளியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

  தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் முருகேசன், உதவி தலைமையாசிரியர்கள் சமுத்திரக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஆசிரியர் சிவசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து பள்ளியின் சார்பில் மாணவன் ஆத்திப்பிற்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினர்.

  நிகழ்ச்சியில் சுடர்மணி உடற்கல்வி இயக்குனர் சஞ்சய்காந்தி தேசிய மாணவர் படை அலுவலர் அருள்தாஸ் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங் கிணைப்பாளர் முருகன், ஆசிரி யர்கள் ஆசிரியைகள், என்.சி.சி மாணவர்கள் உட்பட அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனா¢.

  பள்ளி ஆசிரியர் தண்டமிழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.
  Next Story
  ×