என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    உதவியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்.
    X
    உதவியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்.

    கிராம உதவியாளர் சங்க வட்ட செயற்குழு கூட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாபநாசத்தில் கிராம உதவியாளர் சங்க வட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    பாபநாசம்:

    தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் பாபநாசம் வட்ட செயற்குழுக் கூட்டம் சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. பாபநாசம் வட்ட தலைவர் சோம. பாஸ்கரன் தலைமை வகித்தார். 

    பாபநாசம் வட்ட செயலாளர் மனோகரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கார்த்தி சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் சென்னையில் எழிலகத்தில் அமைந்துள்ள மாநில வருவாய் துறை அலுவலகம் முன்பு வருகிற 10.3.22 அன்று மீண்டும் சிபிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் வட்ட துணைத் தலைவர் சக்திவேல், வட்ட துணைச்செயலாளர் விக்டோரியா மேரி, சரக அமைப்பாளர்கள் சுப்பிரமணியன், ரமேஷ், ஐயப்பன், உமா, ஜவகர் பாட்ஷா, மணிகண்டன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் மணி நன்றி கூறினார்.
    Next Story
    ×