search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழி தேரோட்டத்துக்கான கொடியேற்று விழா
    X
    ஆழி தேரோட்டத்துக்கான கொடியேற்று விழா

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. மார்ச் 15-ந்தேதி ஆழித் தேரோட்டம் நடக்கிறது.
    திருவாரூர்:

    திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழா நடத்தப்பட்டு அதன் நிறைவாக உலகப் பிரசித்தி பெற்ற ஆழித் தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு வரும் மார்ச் 15&ந்தேதி, பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் ஆழித் தேரோட்டம் நடைபெறுகிறது.

    அதையொட்டி இன்று காலை பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சந்திரசேகரர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் நந்தி சின்னம் பொறிக்கப்பட்ட கொடி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை உச்சரித்து கோவில் கொடிமரத்தில் இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து இன்று மாலை சந்திரசேகரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. தினமும் இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது. வரும் 9&ந் தேதி வசந்த மண்டபத்தில் தியாகராஜ சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வசந்த உற்சவம் நடைபெறும். தொடர்ந்து மார்ச் 15&ந்தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×