search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    திருப்பூரில் குறையும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை

    தற்போது ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து தற்போது 200-க்கும் குறைவானவர்களே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இரண்டாவது தவண தடுப்பூசி செலுத்தி 273 நாட்கள் அல்லது 9 மாதம் கடந்தவருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 4-ம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 

    5-ம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டத்தின் 77 மையங்களில் நடந்தது. முகாமில் 188 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். 

    மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கடந்த 3 ‘மெகா’ தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து வந்தது. 

    தற்போது ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து தற்போது 200-க்கும் குறைவானவர்களே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×