search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

    24ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 12 மணி வரை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் டவுன் தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா கடந்த 15-ந்தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வருகிற 25ந்தேதி வரை விழா நடைபெற உள்ளது. 

    வருகிற 21ந்தேதி, (திங்கட்கிழமை) மகாகணபதி பொங்கல், இரவு 8 மணிக்கு நொய்யல் ஆற்றில் வீற்றிருக்கும் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனம் கோவிலில் இருந்து கம்பம், கும்பம், வாணவேடிக்கை, நையாண்டி மேளம், முளைப்பாரி, பால்குடம், தீர்த்தகுடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சேருதல் மற்றும் கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    22ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணிக்கு தில்லை நகர் பி. ராஜகோபால் வீட்டில் இருந்து படைக்கலம் மற்றும் தீர்த்தக்குடம் ஊர்வலம் கோவிலுக்கு வந்து சேரும் நிகழ்ச்சி நடக்கிறது. 

    23-ந்தேதி (புதன்கிழமை) காலை 5 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் விழா, 24ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 12 மணி வரை மஞ்சள் நீராடுதல், 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் அன்னதானம் தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
    Next Story
    ×