என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கன்னியாகுமரியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
  X
  கன்னியாகுமரியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

  கன்னியாகுமரியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக கன்னியாகுமரியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
  கன்னியாகுமரி:

  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 

  குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சியிலும் குழித்துறை, குளச்சல், பத்மநாபபுரம், கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகளிலும் 51 பேரூராட்சிகளிலும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. 

  இதைத் தொடர்ந்து இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்களும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

  தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலும் தேர்தலில் பாதுகாப்பாக வாக்களிக்க வேண்டியதன்அவசியத்தை வலியுறுத்தியும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற் காக கன்னியாகுமரியில் போலீசார் நேற்று மாலை கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினார்கள்.
   
  கன்னியாகுமரி மாதவபுரம் சந்திப்பில் இருந்து போலீசாரின் இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர் வலத்தில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் நூற்றுக் கணக்கான போலீசார் பங்கேற்றனர். 

  மாதவபுரம் சந்திப்பில் இருந்து புறப்பட்ட இந்த போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, தபால் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, காந்தி மண்டபபஜார் வழியாக கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி மண்டபம் முன்பு நிறைவடைந்தது.
  Next Story
  ×