என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பேராவூரணியில் போலீசார் கொடி அணிவகுப்பு
  X
  பேராவூரணியில் போலீசார் கொடி அணிவகுப்பு

  பேராவூரணியில் போலீசார் கொடி அணிவகுப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பேராவூரணியில் போலீசார் கொடி அணிவகுப்பு
  பேராவூரணி:

  பேராவூரணி பேரூராட்சி 18 வார்டுகளுக்கு வரும் 19 ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., அ.ம.மு.க., நாம் தமிழர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 78 பேர் போட்டியிடுகின்றனர். 

  தேர்தல் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யவும், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக தஞ்சை ஏ.டி.எஸ்.பி. கென்னடி தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

  பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி சேது சாலை, பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை வழியாக சென்று ஆவணம் சாலையில் நிறைவடைந்தது. 

  கொடி அணிவகுப்பில் டி.எஸ்.பி.கள் செங்கமலக் கண்ணன், மோகன்தாஸ், பயிற்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் செல்வி, ஜெயா மற்றும் 100&க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×