என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போலீசார் கொடி அணிவகுப்பு நடத்திய காட்சி.
  X
  போலீசார் கொடி அணிவகுப்பு நடத்திய காட்சி.

  பனமரத்துப்பட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பனமரத்துப்பட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
  பனமரத்துப்பட்டி:

  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைத்து வாக்காளர்களும் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதனை வலியுறுத்தி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவுப்படி பனமரத்துப்பட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.கொடி அணி வகுப்பிற்கு சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமை தாங்கினார். 

  மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் போலீஸ் கலையரசி முன்னிலை வகித்தார். பனமரத்துப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி  முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது. 

  இந்த அணிவகுப்பில் ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி,அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உஷாராணி, பனமரத்துப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவி,ராஜசேகரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×