என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாஜக
  X
  பாஜக

  குண்டு வீச்சு பற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும்- பா.ஜனதா கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தின் பின்னணி என்ன? என்பது பற்றி போலீசார் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
  சென்னை:

  பா.ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் கூறியதாவது:-

  பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைதான நபர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் அவர் சிறை சென்று வந்துள்ளார். நீட் விவகாரம் தொடர்பாகவே அவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  குற்றச்செயல்களில் தொடர்புடைய ஒருவருக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும்? எனவே இதுபற்றி போலீசார் முழுமையாக விசாரித்து பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா என்பதையும் கண்டறிய வேண்டும்.

  பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளரான கராத்தே தியாகராஜன் கூறியதாவது:-

  பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தின் பின்னணி என்ன? என்பது பற்றி போலீசார் முழுமையாக விசாரிக்க வேண்டும். தற்போது கருக்கா வினோத் என்ற நபரை கைது செய்து இருப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அவர் சி பிரிவு ரவுடி என்று போலீசார் கூறினார்கள். இந்த சம்பவத்தில் அவரது பின்னணியில் மேலும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அது பற்றி முழுமையாக விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும்.

  இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


  Next Story
  ×