search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்.
    X
    அரசு பள்ளியில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்.

    அரசு பள்ளிகளில் கண்கவர் ஓவியங்கள்

    திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து கொடுத்து வருகின்றனர் பட்டாம்பூச்சி குழுவினர்.
    திருப்பூர்:

    திருப்பூர் பாண்டியன்நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் சந்தோஷ்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்து பட்டாம்பூச்சி என்ற குழுவை உருவாக்கி உள்ளனர்.

    இந்த குழுவினர் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளை கவரும் வகையில் விலங்குகள், பறவைகள், காய்கறி, பழ வகைகள், இயற்கை காட்சிகள், தேசத்தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான ஓவியங்களை வரைந்து வருகின்றனர். 

    இதுவரை திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து கொடுத்து வருகின்றனர். 

    திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பள்ளி கல்விக்குழு மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. . 

    இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தில் ஓவியங்கள் வரைந்து தருமாறு பள்ளி ஆசிரியர் ஜனார்த்தனன் பட்டாம்பூச்சி குழுவினரிடம் வேண்டுகோள் வைத்தார். 

    இதை ஏற்ற அந்த குழுவினர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார் தலைமையில் குழு உறுப்பினர்களும் அரசு பள்ளி ஆசிரியர்களான கார்த்திகேயன், ராஜீகிருஷ்ணன் (குமார்நகர் தொடக்கப்பள்ளி), ரவிச்சந்திரன் (சந்திரகாவி நடுநிலைப்பள்ளி), ஹரிகிருஷ்ணன் (ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளி) ஆகியோர் இணைந்து அங்கன்வாடி மைய கட்டிடத்தின் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் கண்கவர் ஓவியங்களை வரைந்துள்ளனர். 

    இதுகுறித்து பட்டாம்பூச்சி குழுவின் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது, 

    எங்களது குழு முற்றிலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் ஓவியங்கள் வரைய நாங்கள் எந்த தொகையும் பெறுவதில்லை. 

    அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் ஓவியங்களை இலவசமாக வரைந்து கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். 

    விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நாங்கள் நேரில் வந்து ஓவியங்களை வரைந்து கொடுப்போம். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  
    Next Story
    ×