search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மதுரை தெற்குவாசல் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க அலைமோதிய கூட்டம்.
    X
    மதுரை தெற்குவாசல் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க அலைமோதிய கூட்டம்.

    மதுரையில் மீன் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

    முழு ஊரடங்கு ரத்து ஆனதை தொடர்ந்து மதுரையில் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    மதுரை

    மதுரையில் கொரோனா பரவல் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்க தொடங்கியது.  தமிழகஅரசு கடந்த 7-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு  கட்டுப்பாடுகளை விதித்தது. 

    மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு கடந்த 3 வாரங்களாக அமலில் இருந்தது. மதுரை மாவட்டம் முழுவதும் வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி இறைச்சி கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. 

    இந்தநிலையில் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. இதையடுத்து இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்குகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வியாபார கடைகள் திறக்கப்பட்டன.

    காந்தி நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை மாவட்டத்தில் இறைச்சி கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் இன்று மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

    மதுரை மாவட்டத்தில் இன்று இறைச்சி கடைகள் திறக்கப்படவில்லை. பொதுமக்கள் மீன் கடைகளை தேடி படையெடுத்தனர்.  கரிமேடு, மாட்டுத்தாவணி, நெல்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்களின் விலை அதிகரித்தது.  பொதுமக்கள் விலை உயர்வை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கிச்சென்றனர்.

    மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மீன்கள் விலை கிலோவில் வருமாறு:&
    சாளை 200, பாறை 250, ஊளி- 250, நகரை 250, திருக்கை 270, பண்ணா 280, சூரை 300, அயிலை 300, நண்டு 320, கிளத்தி 350, சங்கரா 390, கிழங்கான் 430, இறால் 650, கொடுவா 550, வஞ்சிரம் 790,

    Next Story
    ×