search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பிடிபட்ட மலைப்பாம்பு.
    X
    பிடிபட்ட மலைப்பாம்பு.

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு

    மேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்தனர்.
    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு ஊராட்சிக்குட்பட்டது ராசினாம்பட்டி கிராமம். இங்கு நேற்றுஇரவு கண்மாய் பகுதியில் இளைஞர்கள் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். 

    அப்போது   குடியிருப்பு பகுதியை நோக்கி மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை அவர்கள் பார்த்தனர். மிக நீளமாக இருந்த அந்த மலைப்பாம்பை கண்ட சிலர் பீதியில் பின்வாங்கினர். ஆனால் இளைஞர்கள் சிலர் மலைப்பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

    நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு அந்த இளைஞர்கள் மலைப்பாம்பை மடக்கி பிடித்தனர். அந்த பாம்பு சுமார் 20அடி நீளம் இருந்தது. இதுகுறித்து மேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.  

    நிலைய அலுவலர் (பொறுப்பு) ராமராஜன் மற்றும்  வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் மலைப்பாம்பை கிராம இளைஞர்கள் ஒப்படைத்தனர். தீயணைப்பு துறையினர் அந்த  பாம்பினை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
    Next Story
    ×