search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கோவை சிங்காநல்லூரில் ரூ.150 கோடியில் மேம்பாலம்

    சிங்காநல்லூர் பகுதியில் மேம்பாலம் கட்ட வடிவமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது
    கோவை:
    கோவையில் முக்கிய சந்திப்புகளில் ஒன்று சிங்காநல்லூர் சிக்னல் ஆகும். இந்த சிக்னலை தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. 
     
    சிங்காநல்லூர் சிக்னலில் இருந்து ஒண்டிப்புதூர், ராமநாதபுரம், காமராஜர் சாலை மற்றும் வெள்ளலூர் சாலை என நான்கு சாலைகள் சந்திக்கின்றனர். 

    இந்த சிக்னலில் போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற் காக அங்கு சுமார் ரூ.150 கோடி செலவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. அதற்கான மேம்பால வடிவமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது:-& 

    சாலையின் நடுவில் கான்கிரீட் தூண்கள் அமைத்து நான்கு வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும். நிலம் ஆர்ஜிதம் செய்யாமல் மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை   அறிவுறுத்தியுள்ளது. 

    அதன்படியே உழவர் சந்தையில் இருந்து தொடங்கி ஜெய் சாந்தி தியேட்டர் வரை மேம்பாலம் அமைய உள்ளது. 

    மேம்பாலத்தின் கீழ் சிங்காநல்லூர் சிக்னல் வசந்தா மில் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் இடைவெளி விடப்படும். மற்ற   இடங் களில் இடைவெளி இருக்காது. முன்பெல்லாம் பாலங்களை நெடுஞ்சாலைத் துறையே பராமரிக்கும். தற்போது மேம்பாலம் கட்டும் காண்ட்ராக்ட் நிறுவனம் 5 ஆண்டுக்கு  புதிய பாலங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×