search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கன்னியாகுமரி கடலில் புனித நீராடும் பகுதி
    X
    கன்னியாகுமரி கடலில் புனித நீராடும் பகுதி

    தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் நாளை புனித நீராடுகிறார்கள்

    கன்னியாகுமரி கடலில் தை அமாவாசையையொட்டி பக்தர்கள் நாளை புனித நீராடுகிறார்கள்.
    கன்னியாகுமரி:

    இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று.
    இந்தநாளில் இந்துக்கள்அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துஉள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
    அப்போது கடலில் நீராடிவிட்டு வந்து கடற்கரையில் அமர்ந்து இருக்கும் புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்வார்கள்.

    அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வார்கள்.

    பின்னர் கடற்கரையில்உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில்நிலையசந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ளசர்க்கரதீர்த்த காசிவிசாலாட்சிசமேத காசி விஸ்வநாதர் கோ வில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

    அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தை அமாவாசை விழா இந்த ஆண்டு நாளை மதியம் 1-50 மணிக்கு பிறகு கொண்டாடப்படுகிறது.
    இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று உருமாறி ஓமைக்ரானாக வேகமாகபரவிவருவதன்காரணமாககடந்த7-ந்தேதிமுதல் அமலில் இருந்த ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சுற்றுலா தலங்களில் உள்ள கடற் கரைகளுக்கு இன்றுமுதல் செல்ல அனுமதிவழங்கப்பட்டு உள்ளது.


    இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு தைஅமாவாசையான நாளை மதியம் முதல் நாளை மறுநாள் காலை வரை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    அதேநேரத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி கன்னியாகுமரி கடலில் தை அமாவாசை அன்று பக்தர்கள் புனித நீராட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×