என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பஞ்சு விலை அதிகரிப்பால் பிப்ரவரி மாதமும் நூல் விலை உயர வாய்ப்பு
Byமாலை மலர்30 Jan 2022 11:07 AM IST (Updated: 30 Jan 2022 11:07 AM IST)
தமிழக நூற்பாலைகள் மாதம்தோறும் 1-ந் தேதி நூல் விலையை நிர்ணயிக்கின்றன.
திருப்பூர்:
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பிரதான மூலப்பொருளான ஒசைரி நூல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டேசெல்கிறது. 15 மாதங்களாக மாதம்தோறும் நூல் விலை உயர்கிறது.
ஆடைகளுக்கு விலை நிர்ணயிக்கமுடியாமல் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் திணறுகின்றன. உற்பத்தி செலவு அதிகரிப்பு, நடைமுறை மூலதன தேவை அதிகரிப்பு என நிறுவனங்களுக்கு பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
பஞ்சு விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை தற்போது ரூ. 81 ஆயிரத்தை தொட்டுள்ளது.
தமிழக நூற்பாலைகள் மாதம்தோறும் 1-ந் தேதி நூல் விலையை நிர்ணயிக்கின்றன.
வருகிற பிப்ரவரி மாதம் 1-ந் தேதி புதிய நூல் விலை வெளியாக உள்ளது. பருத்தி விலை உயர்ந்துள்ளதால் நூல் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இதனால் திருப்பூர் பின்னலாடை துறையினரின் கவலை மேலும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-
பஞ்சு விலை உயர்வால் நூல் விலையும் தொடர்ந்து உயர்ந்துவருகிறது.
கேண்டி ரூ.76 ஆயிரமாக இருந்த பஞ்சு தற்போது ரூ. 81 ஆயிரத்தை எட்டிவிட்டது. நூல் விலை குறையவேண்டும் என்பதே திருப்பூர் பின்னலாடை துறையினரின் எதிர்பார்ப்பு. பஞ்சு விலையை பார்க்கும்போது நூல் விலை குறைய வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
வரும் 1-ந் தேதியும் நூல் விலை உயருமே என்கிற கவலை சூழ்ந்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் ஆர்டர்கள் கைநழுவி நிரந்தரமாக போட்டி நாடுகளை நோக்கி சென்றுவிடும்.
தொழிலாளர் வேலை இழப்பர். பருத்தியை நேரடியாக பயன்படுத்தும் நூற்பாலைகள் மவுனம் காப்பது கவலை அளிக்கிறது. பஞ்சு விலையை கட்டுப்படுத்த ஆடை உற்பத்தியாளர்களுடன் நூற்பாலை துறையினரும் கரம்கோர்த்து குரல் கொடுக்கவேண்டும்.
பஞ்சுக்கு இறக்குமதி வரி விலக்கு, ஏற்றுமதி பஞ்சுக்கு கட்டுப்பாடு அறிவிப்புகள் மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும். பஞ்சு விலை கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே ஆடை உற்பத்தி துறை பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×