search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லையில் எஸ்.எஸ்.சி. தேர்வு 6-ந்தேதி நடக்கிறது

    நெல்லை மாவட்டத்தில் ஸ்டாப் செலக்ஷன் கமிஷனால் ஒருங்கிணைந்த பட்டதாரிகள் அளவிலான மேல்நிலை தேர்வு வருகிற 6&ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    நெல்லை மாவட்டத்தில் ஸ்டாப் செலக்ஷன் கமிஷனால் ஒருங்கிணைந்த பட்டதாரிகள் அளவிலான மேல்நிலை தேர்வு வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது.

    பாளை ரஹ்மத் நகரில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள  மையத்தில்   தேர்வு நடைபெற உள்ளது. தேர்வினை 213 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

    தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்கவும்,  தேர்வு மையத்திற்கு கூடுதலாக பஸ்கள் இயக்குமாறும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேர்வு நடைபெறும் கல்வி நிலையத்திற்கு போலீஸ் மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும்,  மையத்தின் அருகாமையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவக்குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதிகள் செய்து தயார் நிலையில் வைத்திடவும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேர்வு எழுதும் தேர்வர்கள் அதிக எண்ணிக்கையில் வர இருப்பதால் கொரோனா பணிகளை மேற்கொண்டு பராமரித்திடுமாறும், உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேர்வு எழுதுவோர் தங்களின் தேர்வர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்திடவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிடவும் வேண்டும்.

    மேலும் தேர்வு அறையினுள் செல்போன்களை எடுத்து செல்லக்கூடாது. தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×