search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலை செடிகள்.
    X
    கடலை செடிகள்.

    கோவில்பட்டி பகுதியில் நிலக்கடலை விளைச்சல் பாதிப்பு

    கோவில்பட்டி பகுதியில் பருவம் தவறிய மழையால் நிலக்கடலை விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கோவில்பட்டி:

     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர், அயன் ராஜாபட்டி, பசுவந்தனை பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகிறது.

    மானாவாரி செம் மண் நிலங்களில் பயிரிடப்படும் நிலக்கடலை நன்கு திறட்சியாக இருப்பது மட்டுமின்றி, தித்திப்பு சுவையும் அதிகமாக இருக்கும் என்பதால் நல்ல கிராக்கி உண்டு.

    அதிலும் அயன் ராஜாபட்டி பகுதியில் விளையக்கூடிய நிலக்கடலைக்கு மக்கள் மத்தியிலும், வியாபாரிகளி மத்தியலும் நல்ல மவுசு உண்டு காரணம் கடலை நல்ல தின்னம் மற்றும் சுவை தான்.

    அதிகளவில் இப்பகுதியில் விளையக்கூடிய நிலக்கடலை விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எண்ணெணெய் தயாரிப்பில் ஈடுபடும் ஆலையினர் கொள்முதல் செய்வது வழக்கம். இதனால் அயன்ராஜாபட்டியில் விவசாயிகள் ஆர்வமுடன் நிலக்கடலை சாகுபடி செய்து வந்தனர்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்மை காரணமாக நிலக்கடலை விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஓரளவு மழை பெய்த காரணத்தினால் நஷ்டம் இல்லை என்றாலும், செய்த செலவிற்கு நிலக்கடலை வந்தது. ஆனால் இந்தாண்டு அந்தளவு கூட விளைச்சல் இல்லை என்று வேதனையுடன் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    பொதுவாக இப்பகுதியில் கரீப் பருவம் முடிந்து, ராபி பருவம் தொடங்க உள்ள நிலையில் ஆடிப்பட்டத்தின் முதற்பட்டமாக நிலக்கடலை பயிரிடப்படுவது வழக்கம்.

    ஆனால் பருவமழை தொடக்கத்தில் சரியமாக பெய்யமால் போன காரணத்தினால் விவசாயிகள் காலம் தவறி நிலக்கடலை பயிரிட தொடங்கினர்.

    5 முறை உழவு, விதை, உரம் இடுதல், களையெடுத்தல் என ஒரு ஏக்கருக்கு 25ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்து நிலக்கடலை நல்ல லாபம் கொடுக்கும் என்று காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது.

    சரியான நேரத்தில் மழையின்மை, மேலும் கடுமையான உரத்தட்டுபாடு காரணமாக செடிகளில் நிலக்கடலை வளர்ச்சியில்லமால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக ஒரு செடியில் கொத்தாக நிலக்கடலை பிடிக்கும் நிலையில் தற்போது ஒரு செடிக்கு ஒன்று அல்லது 3 கடலைகள் மட்டுமே இருப்பதால் விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    10 செடிகள் பறித்தால்  அதில் 4 செடிகளில் முற்றிலுமாக காய்  (கடலை) இல்லாத நிலை தான் உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

    வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 மூட்டைகள் நிலக்கடலை கிடத்த நிலையில் தற்பொழுது ஒரு மூட்டை கூட வரவில்லை என்று வருத்ததுடன் விவசாயிகள் கூறுகின்றனர்.

    நிலக்கடலை பயிர் 120 நாள்கள் கொண்டது, நிலக்கடலை பயிரிடும் போதும், அதனை பிடுங்கும் போது மழை தேவை. ஆனால் அவ்வாறு இல்லை என்பதால் தற்பொழுது நிலக்கடலை செடியை பிடுங்குவதற்காக வெளியில் ஒரு டிராக்டர் தண்ணீர் 1000 ரூபாய் விலைக்கு வாங்கி நிலங்களில் தெளித்து நிலக்கடலை அறுவடை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    வீட்டு தேவைகளுக்கு கூட நிலக்கடலை மகசூல் இல்லை என்பதால் வழக்கமாக வரக்கூடிய வியாபாரிகள் கூட இப்பகுதியில் தலைகாட்டவில்லை என வேதனையுடன் கூறுகின்றனர் விவசாயிகள்.
     
    எனவே அரசு பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாணர தொகை வழங்குவது மட்டுமின்றி, நிலக்கடலையும் பயிர்காப்பீட்டில் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×