
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
இந்தநிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 1-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதோஷத்தையொட்டி மாலை 4.30 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
வருகிற 31-ந் தேதி தை மாதம் அமாவாசை என்பதால் சுந்தரமகாலிங்கசுவாமிக்கு பால், பழம் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தை அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதால் காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களுக்கும், 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கோவிலுக்கு வர அனுமதியில்லை.
அதேபோல இரவு நேரத்தில் கோவிலில் தங்க அனுமதி இல்லை. நீர் ஓடையில் குளிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். பிரதோஷத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.