search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காடம்பாறை வனப்பகுதியில் சிறுத்தை விடப்பட்டது
    X
    காடம்பாறை வனப்பகுதியில் சிறுத்தை விடப்பட்டது

    திருப்பூரில் அட்டகாசம்- காடம்பாறை வனப்பகுதியில் சிறுத்தை விடப்பட்டது

    திருப்பூர் மாவட்ட வனத்துறையினர் மற்றும் வால்பாறை வனச்சரக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் கூண்டிலிருந்து சிறுத்தையை திறந்து விட்டனர். சிறுத்தை கூண்டிலிருந்து வெளியே பாய்ந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.
    வால்பாறை:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதிக்கு அருகில் உள்ள பாப்பாங்குளம் சோளக்காட்டில் கடந்த 24-ந் தேதி சிறுத்தை ஒன்று பதுங்கியிருந்தது. இந்த சிறுத்தை சோளக்காட்டில் பணியிலிருந்த 2 பேரை பாய்ந்து தாக்கி அட்டகாசம் செய்தது. இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் மாவட்ட வனத்துறையினர் மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினர் இணைந்து சம்பவயிடத்தில் முகாமிட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். பின்னர் சிறுத்தை அனுப்பர்பாளையம் கஸ்தூரிபாய் வீதி அருகில் உள்ள முட்புதருக்குள் பதுங்கியது.

    வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தி சிறுத்தையை பிடித்து கூண்டில் ஏற்றி கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வால்பாறை வனச்சரகத்தில் காடம்பாறை அப்பர்ஆழியார் வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கொண்டு வந்தனர். சர்சாப்ட் என்ற இடத்தில் சிறுத்தைப்புலியின் கால்களில் கட்டியிருந்த கயிறையும் முகத்தை மறைத்திருந்த துணிகளை அப்புறப்படுத்தினர்.

    இதையடுத்து திருப்பூர் மாவட்ட வனத்துறையினர் மற்றும் வால்பாறை வனச்சரக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் இரவு 9.30 மணியளவில் கூண்டிலிருந்து சிறுத்தையை திறந்து விட்டனர். இதையடுத்து சிறுத்தை கூண்டிலிருந்து வெளியே பாய்ந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.
    Next Story
    ×