search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலோசனை கூட்டம்
    X
    ஆலோசனை கூட்டம்

    கோவை மாநகராட்சியில் தேர்தல் பணியாளர்களுக்கு 31-ந்தேதி பூஸ்டர் தடுப்பூசி

    கோவை மாநகராட்சி தேர்தலையொட்டி 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

    மாவட்ட வருவாய் அதிகாரி லீலாஅலெக்ஸ், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தானம், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவரக்நாத்சிங் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நிருபர்களிடம் கூறியதாவது:

    கோவை மாநகராட்சியில் இன்று முதல் 4-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 5-ந்தேதி  வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும்.  தேர்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம்  மார்ச் 2-ந்தேதி  நடைபெறும். 4-ந் தேதி மேயருக்கான  மறைமுக தேர்தல் நடைபெறும். 

    மாநகராட்சியில் 15 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிகளை தொடங்கி உள்ளனர்.  அனைத்து உதவி தேர்தல் அலுவலகத்திலும் நீதிமன்ற உத்தரவின் படி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.  

    கோவை மாநகாரட்சியில் மொத்தம் - 1290 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.   அதில் 169 பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. 

    ஜி.சி.டி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி தேர்தலுக்காக 1,192 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 105 மண்டல அதிகாரிகள் வாக்குபதிவு குறித்து கட்சி முகவர்களுக்கு பயிற்சியளிக்க உள்ளனர். 31-ந்  தேதி தேர்தல் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்.

    தேர்தல் செலவீனம், வைப்பு தொகை குறித்து அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக மாநகராட்சியில்  ஒரு வேட்பாளர் ரூ.85 ஆயிரம் செலவு செய்யலாம்.  2018-ம் ஆண்டு தேர்தல் விதிப்படியே இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு கொ ரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால், மாற்று ஊழியர்கள் பணிக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  
    Next Story
    ×