search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தேர்தல் அமைதியாக நடைபெற அரசியல் கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் - கோவை கலெக்டர் வேண்டுகோள்

    கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற அரசியல் கட்சியினர் ஒத்துழைக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
    கோவை:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். வேட்பு மனுத்தாக்கல் செய்ய பிப்ரவரி 4-ந்தேதி கடைசி நாளாகும். 5-ந்தேதி வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். 7-ந்தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற விரும்புவோர் திரும்ப பெறலாம். 

    பிப்ரவரி 19&ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனு மதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கை 22&ந் தேதி நடைபெறும். 

    கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் என மொத்தம் 41 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 7 நகராட்சிகளுக்கு உட்பட்ட 198 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 33 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 513 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. 

    கோவை மாநகராட்சிக்கு 1290 வாக்குச்சாவடிகள், 7 நகராட்சிகளுக்கு 390 வாக்குச்சாவடிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு 632 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 2312 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 

     இத்தேர்தலில் 41 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 110 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஒரு வாக்குச்வாடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் வீதம் சுமார் 10172 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய தேர்தல் அறிவிக்கை படி கடந்த 26-ந் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் மாதிரி நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. 

    எனவே அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் நடைபெற எல்லாவிதத்திலும் ஒத்து ழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  
    Next Story
    ×