search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் வன ஊழியர்கள்.
    X
    வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் வன ஊழியர்கள்.

    களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்தில் இந்தாண்டுக்கான பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் நேற்று  தொடங்கியது.

    களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் பணிகளை தொடங்கி வைத்தார்.  இதில் வனத்துறை ஊழியர்கள் 80 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி களும் அளிக்கப்பட்டுள்ளது.

    களக்காடு வனசரகத்தில் 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்தில் 7 குழுவினரும், கோதையாறு வனசரகத்தில் 6 குழுவினரும் என மொத்தம் 21 குழுவினர் பிப் 6-ந்தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து கணக்கெடுப்பு நடத்துவார்கள்.

    மேலும் இந்தாண்டு முதல் கணக்கெடுப்பு பணியில் செல்போன் ஆப் பயன் படுத்தப்படுகிறது.

    வனவிலங்குகள் கணக் கெடுக்கும் பணி நடை பெறு வதால் நேற்று முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
    Next Story
    ×