search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக கோவில்கள் திறக்கப்பட்டன.
    X
    கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக கோவில்கள் திறக்கப்பட்டன.

    கோவையில் வழிபாட்டு தலங்கள் திறப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி

    கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக கோவில்கள் திறக்கப்பட்டன.
    கோவை:

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள கோவில் கள், சர்ச்சுகள், மசூதிகள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பக்தர்களுக்கு தரிசனத்துக்கு தடை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

    அதன்படி கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கான தடை இருந்தது. கோவில்களில் சுவாமிகளுக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. 

    கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கல் பண்டிகை யின்போது பொது மக்கள் கோவில்களுக்குச் செல்ல முடியவில்லை. இதேபோல மருதமலை முருகன் கோவில் தைப்பூசம், கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோயில் மகரஜோதி தரிசனம் ஆகியவற்றில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் கோவில் முன்பு பூக்களை வைத்தும், சூடம் ஏற்றியும் வழிபட்டு  வந்தனர். சாமி தரிசனம் செய்ய முடியாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

    இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழுஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் மூன்றுநாள் தரிசனம் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று பொதுமக்கள் உற்சாகத்துடன் கோவிலுக்குச் சென்றனர்.

    மூன்று வாரங்களுக்குப் பிறகு மீண்டும் வெள்ளிக்கிழமை கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவில், கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், சித்தாபுதூர் அய்யப்பன் கோவில், புளியகுளம் விநாயகர் கோவில்களில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு காலை முதலே தரிசனம் செய்து வருகின்றனர். 

    இதேபோல் கிறிஸ்தவ ஆலயங்களும் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது. மசூதி, தர்காக்களில் வெள்ளிக் கிழமையான இன்று நடந்த பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.க உள்ள   சேர்ந்த மூர்த்தி என்பவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். 
    Next Story
    ×