search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேட்புமனு தாக்கலை முன்னிட்டு பாளை மண்டல அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த காட்சி.
    X
    வேட்புமனு தாக்கலை முன்னிட்டு பாளை மண்டல அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் 24 இடங்களில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது- அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு

    நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று 24 இடங்களில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இதையொட்டி சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக் கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது.

    நெல்லை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகள், 3 நகராட்சிகளில் உள்ள 69 வார்டுகள், 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வார்டுகள் என மொத்தம் 397 வார்டுகளுக்கான கவுன் சிலர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படுகிறது.

    நெல்லை மாநகராட்சிகளில் உள்ள 4 மண்டல அலுவலகங்களிலும்,  3 நகராட்சி அலுவலகங்கள் மற்றும் 17 பேரூராட்சி அலுவலகங்கள் என மாவட்டத்தில் மொத்தம் 24 இடங்களில் இன்று மனுத்தாக்கல் நடைபெற்றது.

    காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகிறது.

    கொரோனா தொற்று காலம் என்பதால் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனுவுடன் அதிகாரிகள் அறைக்கு சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய வலியுறுத் தப்பட்டுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய வருகிற 4-ந் தேதி இறுதி நாளாகும்.

    இதுவரை அதிகாரபூர்வ கட்சிகள் சார்பாக வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. இதனால் அதிகாரபூர்வ கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை. இதனால் சுயேட்சை வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல் செய்தனர்.

    வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங் களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

    அலுவலகங்கள் அமைந் துள்ள பகுதியில் 200 மீட்டருக்கு முன்பே வேட்பாளர்களுடன் வருபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு வேட் பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று ஏராளமானவர்கள் தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு வேட்புமனு படிவங்களை வாங்கி சென்றனர்.

    தேர்தல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளில் போலீசார் மற்றும் பறக்கும்படையினரும் ஆங்காங்கே வாகன  சோதனைகள் நடத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×