search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    நாகர்கோவில் மாநகராட்சியை கைப்பற்ற 35 வார்டுகளில் களமிறங்க தி.மு.க. வியூகம்

    நாகர்கோவில் மாநகராட்சியை கைப்பற்ற 35 வார்டுகளில் களமிறங்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
    நாகர்கோவில்:
     
    நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
    இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19-ந் தேதி நடக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சிக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. 

    நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளில் 26 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேயர் பதவிக்கு ஆண், பெண்கள்  களம் இறங்கும் வகையில் (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் மேயர் யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. 

    நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 670 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 850 பெண் வாக்காளர்களும், 11 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 531 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர்.

    நாகர்கோவில் மாநக ராட்சியை கைப்பற்ற தி.மு.க. கூட்டணி முனைப்புக்காட்டி வருகிறது.  இதையடுத்து வார்டு ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க. கட்சியினர் கூட் டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

    தி.மு.க. 30 முதல் 35 வார்டுகளில் களம் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. மீதமுள்ள வார்டுகளை கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஓரிரு வார்டுகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் தங்களுக்கு கூடுதல் வார்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சிக்கும் குறை வான வார்டுகளே ஒதுக்கப் படுவதாக கூறப்படுவதை காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களுக்கு அதிக வார்டுகள் வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியும் நாகர்கோவில் மாநகராட்சி யில் அதிகமான வார்டுகளில் களமிறங்க முனைப்பு காட்டி வருகிறார்கள். 

    பாரதிய ஜனதா கட்சி 30 வார்டுகளில் களம் இறங்க தயாராகி வருகிறது. ஆளூர் பேரூராட்சி நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வரும் 3 வார்டுகளையும் பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

    மேலும் ஏற்கனவே வெற்றி பெற்ற வார்டுகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. பாரதிய ஜனதா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள பல்வேறு வார்டுகளில் அ.தி.மு.க. நிர்வாகிகளும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். 

    இதனால் வார்டு ஒதுக்கீடு பிரச்சினையில் அ.தி.மு.க. பாஜக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கூட்டணி கட்சி தலைவர்கள் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். 

    வேட்புமனு தாக்கல் முடிவடைய இன் னும் 6 நாட்களே உள்ள நிலையில் வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×