search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுபானங்கள் மொத்தமாக விற்க அனுமதி இல்லை- டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவு

    உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது.

    தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    மதுபானங்கள் அட்டை பெட்டியாகவோ, மொத்தமாகவோ விற்க கூடாது என்று டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    வாடிக்கையாளர் ஒருவருக்கு 2 முழு பாட்டில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும். அதற்கு மேல் வழங்க கூடாது என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    தனித்தனியாக விற்பனை செய்து அதற்கு ஏற்பவே பில் போட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பணிகள் தற்போது தொடங்கி விட்டன.

    அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். அவர்கள் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி கட்சி தொண்டர்களுக்கும், வாக்காளர்களுக்கும் விநியோகிக்க கூடும் என்பதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதியின்படி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள் உள்ளிட்ட அன்பளிப்புகளை கொடுக்க கூடாது. மது வாங்கி கொடுப்பதும் அன்பளிப்பில் சேரும் என்பதால் தேர்தல் முடியும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
    Next Story
    ×