search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு போலி தங்க கட்டியை கொடுத்து தம்பதியை ஏமாற்றிய 3 பேர் கைது

    கோவையில் போலி தங்க கட்டியை கொடுத்து தம்பதியை ஏமாற்றிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை நீலாம்பூர் அருகே உள்ள முதலிபாளையம் ரங்காநகரை சேர்ந்தவர் ஷேக்அலாவுதீன். இவர் அந்த பகுதியில் லேத் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி நெசிலா (வயது 40) .

    கடந்த 20-ந் தேதி ஷேக்அலாவுதீன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் மண்அள்ளுகிற கூலி வேலை செய்து வருவதாகவும் , கூலி வேலை செய்த போது தங்க கட்டி ஒன்று கிடைத்ததாகவும் கூறினார். அந்த தங்க கட்டி ரூ. 15 லட்சம் மதிப்பு இருக்கும் என்றும் ரூ. 10 லட்சம் பணம் கொடுத்தால் தங்க கட்டியை கொடுத்து விடுவதாக கூறினார். மேலும் தங்ககட்டி வேண்டும் என்றால் கிணத்துக்கடவு புதிய பஸ் நிலையத்திற்கு வரும் படி கூறினார்.

    இதனையடுத்து ஷேக்அலாவுதீன் அவரது மனைவி நெசிலா ஆகியோர் ரூ. 5 லட்சம் பணத்துடன் கிணத்துக்கடவு புதிய பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். அதில் ஒருவர் மட்டும் தம்பதியின் அருகில் வந்து தங்க நிறத்தில் இருந்த ஒரு கட்டியை கொடுத்து ரூ.10 லட்சம் கேட்டார். அப்போது ஷேக்அலாவுதீன் மனைவி நெசிலா ஆகியோர் தங்களிடம் இருந்த ரூ. 5 லட்சத்தை கொடுத்து விட்டு மீதி பணத்தை பின்பு தருவதாக கூறினர்.

    பின்னர் தங்க கட்டியை வாங்கி கொண்டு ஊருக்கு சென்றனர். 27-ந்தேதி அந்த கட்டியை சோதனை செய்த போது அது 2 கிலோ எடை கொண்ட தங்க முலாம் பூசிய உலோக கட்டி என்பது தெரியவந்தது. இதனையடுத்து கட்டியை கொடுத்த நபர்களை தொடர்பு கொண்ட போது அவர்களது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து நெசிலா கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உலோக கட்டியை கொடுத்து தம்பதியை ஏமாற்றிய நபர்களை தேடி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் கிணத்துக்கடவு இன்ஸ் பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ் பெக்டர் அருள் பிரகாஷ் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி ரோட்டைசேர்ந்த நிஜாம் சின்னபாவா (44), சூளேஸ்வரன்பட்டி கட்டபொம்மன் வீதியைசேர்ந்த உசேன் அலி (34) ஆனைமலையை கிருஷ்ணமூர்த்தி (53)ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 5 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    Next Story
    ×