search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    ரெயில்வே மேம்பாலம் சீரமைப்பு, அழகியமண்டபம்-திங்கள்சந்தை சாலையில் போக்குவரத்து மாற்றம்

    நாகர்கோவில் அருகே ரெயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணியால் அழகியமண்டபம்-திங்கள்சந்தை சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக் டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி இடையே இரட்டை வழி ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. குழித்துறை மற்றும் இரணியல் ரெயில் நிலையங் களுக்கு இடையே அழகிய மண்டபம்-திங்கள்சந்தை வரையிலான சாலை இடையே உள்ள மேம்பாலத்தை புனரமைக்க ஜனவரி முதல் ஜூலை வரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அழகியமண்ட பம்-திங்கள்சந்தை செல்லும் வாகனங்கள் நெய்யூர் சி.எஸ்.ஐ. மருத்துவ மனை சந்திப்பில் தற்காலிக வாகனத்தடை அமைத்து சி.எஸ்.ஐ. மருத்துவமனை சந்திப்பில் இருந்து ஆத்திவிளை பழைய ரெயில்வே மேம்பாலம் வழியாக அழகியமண்டபம் மற்றும் பிற இடங்களுக்கு செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள் ளது. 

    மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யும்போது போக்குவரத்து பிரிவு காவலர்கள் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாதவாறு போக்குவரத்து ஒழுங்குப்படுத்த வேண்டும்.

    காவல் ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து பிரிவு, ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர் மூடப்பட்ட சாலையில் பிற வாகனங்கள் ஏதும் செல்லாதவாறு விளம்பர பலகைகள் வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

    மாற்றுப்பாதையில் போக்குவரத்து இடையூறாக உள்ள மரக்கிளைகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் அகற்ற வேண்டும்.

    சாலையில் உள்ள மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள், பெரிய மரங்கள் ஆகியவற்றில் விபத்தினை தவிர்க்கும் வகையில் பிரதிபலிப்பான ஸ்டிக்கர் ஒட்டியும் சாலை பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

    மாற்றுப்பாதையானது கிராமங்களுக்கு சென்று வருவதால் வாகனங்கள் வேகத்தை குறைத்து விபத்து நேராதவாறு நிதானமாக செல்லும் வகையில் குறிப்பிட்ட வேகத்திற்குட்பட்டு செல்வதற்கான அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். 

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
    Next Story
    ×