search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    திருச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள் - கலெக்டர் அறிவிப்பு

    திருச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களை கலெக்டர் அறிவித்துள்ளார்.
    திருச்சி:

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், அனைத்து மாநகராட்சிகள்,  நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான  தேர்தல்கள் குறித்த அறிவிப்பை கடந்த 26-ந்தேதி வெளியிட்டது.  இதன்படி திருச்சி மாவட் டத்தில், திருச்சி மாநகராட்சி, மணப்பாறை,   துவாக்குடி, துறையூர்,  லால்குடி,  முசிறி ஆகிய 5 நகராட்சிகள், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர்,  கூத்தைப்பார்,  மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன் னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளுர், ச.கண்ணனூர், சிறுகமணி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
      
    தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி இன்று (28-ந் தேதி) முதல் பிப்ரவரி 4-ந் தேதி வரை (ஞாயிறு நீங்கலாக) வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. 

    திருச்சி  மாநகராட்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோட்டத்தில், 1, 2, 3, 4, 5, 6, 7, 12 ஆகிய 8 வார்டுகளுக்கு உதவி தேர்தல் (1) அலுவலரிடமும், 13, 14, 15, 17, 18, 19, 20, 21 ஆகிய 8 வார்டுகளுக்கு உதவி தேர்தல் (2) அலுவலரிடமும், ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் வேட்பு மனுவினை தாக்கல் செய்யலாம். 

    அரியமங்கலம் கோட்டத் தில், 16, 30, 31, 32, 33, 34, 49, 50 ஆகிய 8 வார்டுகளுக்கு உதவி தேர்தல் (3) அலுவலரிடமும், 35, 36, 37, 38, 39, 40, 41, 43 ஆகிய 8 வார்டுகளுக்கு உதவி தேர்தல் (4) அலுவலரிடமும், அரியமங்கலம் கோட்ட அலு வலகத்தில் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்யலாம். 

    பொன்மலை கோட்டத்தில் 42, 44, 45, 46, 47, 48, 51, 52, 53 ஆகிய 9 வார்டுகளுக்கு உதவி தேர்தல் (5) அலுவலரிட மும், 58, 59, 60, 61, 62, 63, 64, 65 ஆகிய 8 வார்டுகளுக்கு உதவி தேர்தல் (6)  அலுவலரிடமும், பொன்மலை கோட்ட அலுவலகத்தில் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்யலாம்.
     
    கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில், 26, 27, 28, 29, 54, 55, 56, 57 ஆகிய 8 வார்டுகளுக்கு உதவி தேர்தல் (7) அலுவலரிடமும், 8, 9, 10, 11, 22, 23, 24, 25 ஆகிய 8 வார்டுகளுக்கு உதவி தேர்தல் (8) அலுவலரிடமும், கோ.அபி ஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்யலாம். 

    மணப்பாறை, துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி ஆகிய 5 நகராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு சம்மந்தப்பட்ட   நகராட்சிகளின் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் அலுவலர்களிடம் வேட்பு மனுவினை தாக்கல் செய்யலாம்.பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், கூத்தைப்பார், மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளுர், ச.கண்ணனூர், சிறுகமணி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு சம்மந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் அலுவ லர்களிடம் வேட்பு மனுவினைத்தாக்கல் செய்யலாம். 

    வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். வேட்பு மனுவினை தாக்கல் செய்பவர் மற்றும் முன்மொழிபவர் என இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.  இரு வாகனங்களுக்கு  மேல் அனுமதி  இல்லை.   தேர்தல் ஆணையத்தின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும், கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை யும்,  வேட்பாளர்கள் பின்பற்றிட வேண்டும்.   மேற்கண்ட  தகவலை மாவட்ட தேர்தல்அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சு. சிவராசு தெரிவித்துள்ளார்
    Next Story
    ×