search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை கலெக்டர் சமீரன்
    X
    கோவை கலெக்டர் சமீரன்

    கோவை கலெக்டர் சமீரனுக்கு கொரோனா தொற்று

    குடியரசு தின விழாவில் பங்கேற்ற நிலையில் கோவை கலெக்டர் சமீரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    தமிழகத்தில் தற்போது கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 3,629 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் கோவை மாவட்ட கலெக்டரான சமீரனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். நேற்று இவர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

    இன்று வெளியான பரிசோதனை முடிவில் கலெக்டர் சமீரனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடந்த 26-ந் தேதி குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் சுகாதார பணியாளர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்தே அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கொரோனா உறுதியானது.

    இதனால் கலெக்டருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

    ஏற்கனவே கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது தான் மீண்டு பணிக்கு திரும்பி உள்ளனர். இந்தநிலையில் கலெக்டரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது அரசு அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    Next Story
    ×