search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு
    X
    வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு

    கோவை மாநகராட்சி தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு

    கோவையில் 100 வார்டுகளில் போட்டியிடுவோர் வேட்புமனுதாக்கல் செய்யும் இடங்கள் அறிவிக்கப்பட்டது.
    கோவை:

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளில் 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது.

    இந்நிலையில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், 5 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.நாளை முதல் வேட்புமனு பெறப்படும் நிலையில் 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெயர், வேட்பமனுக்கள் பெறும் இடங்களை கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

    அதன்படி 13,18,19,29,30 ஆகிய 5 வார்டுகளுக்கு வடக்கு மண்டலத்தில் உள்ள உதவி கமிஷனரிடம் மனுதாக்கல் செய்யலாம். 1,2,3,14,15 ஆகிய வார்டுகளுக்கு வடக்கு மண்டலத்தில் உள்ள நிர்வாக அலுவலரிடமும்,4,10,11,12,21 வார்டுகளுக்கு வடக்கு மண்டல அலுவலகத்தில் உள்ள மண்டல சுகாதார அலுவலரிடமும், 20,25,26,27,28 வார்டுகளுக்கு வடக்கு மண்டல அலுவலகத்தில் உள்ள வார்டு குழு தலைவரிடமும் மனு தாக்கல் செய்யலாம்.

    5,6,8,9,22 ஆகிய வார்டுகளுக்கு கிழக்கு மண்டலத்தில் உள்ள உதவி  செயற்பொறியாளரிடமும், 55,56,57,58,61 ஆகிய வார்டு களுக்கு கிழக்கு மண்டலத்தில் உள்ள மண்டல சுகாதார அலுவலரிடமும், 7,23,24,54,59 ஆகிய வார்டுகளுக்கு கிழக்கு மண்டலத்தில் உள்ள உதவி கமிஷ னரிடமும், 50,51,52,53,60 ஆகிய வார்டுகளுக்கு கிழக்கு மண்டலத்தில் உள்ள வார்டு குழு தலைவரரிடமும் மனுத் தாக்கல் செய்யலாம்.

    87,88,89,90,91 வார்டுகளுக்கு தெற்கு மண்டலத்தில் உள்ள உதவி கமிஷனரிடமும், 92,93,94,95,97 ஆகிய வார்டுகளுக்கு தெற்கு மண்டலத்தில் உள்ள நிர்வாக அலுவலரிடமும் ,76,77,78,79,86 ஆகிய வார்டுகளுக்கு தெற்கு மண்டலத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் (திட்டம்),85,96,98,99,10 ஆகிய வார்டுகளுக்கு தெற்கு மண்டலத்தில் உள்ள வார்டு குழு தலைவரிடமும் மனுதாக்கல் செய்யலாம்.

    71,72,73,74,75 ஆகிய வார்டுகளுக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள உதவி கமிஷனரிடமும், 36,42,43,44,45 ஆகிய வார்டுகளுக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள உதவி செயற் பொறியாளரிடமும், 37,38,39,40,41 ஆகிய வார்டு களுக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள மண்டல சுகாதார அலுவலரிடமும், 16,17,33,34,35 ஆகிய வார்டுகளுக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள வார்டு குழு தலைவரிடமும் மனுதாக்கல் செய்யலாம்.

    62,63,64,65,84 ஆகிய வார்டுகளுக்கு மத்திய மண்டலத்தில் உள்ள உதவி கமிஷனரிடமும், 48,49,67,68,70 ஆகிய வார்டுகளுக்கு மத்திய மண்டலத்தில் உள்ள நிர்வாக அலுவலரிடமும், 31,32,46,47,69 ஆகிய வார்டுகளுக்கு டாடாபாத்தில் உள்ள மாநகராட்சி பொறியாளர் பிரிவு அலுவலகத்திலும், 66,80,81,82,83 ஆகிய வார்டு களுக்கு மத்திய மண்டலத்தில் உள்ள வார்டு குழு தலைவ ரிடமும் மனுதாக்கல் செய்யலாம்.
    Next Story
    ×