search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லை மாநகராட்சி தேர்தல் - தி.மு.க. கூட்டணியில் 10 வார்டுகளை கேட்க காங்கிரஸ் திட்டம்

    நெல்லை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 10 வார்டுகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
    நெல்லை:

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக் கான தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (வெள்ளிக் கிழமை) தொடங்குகிறது.

    இதையொட்டி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரிப்பதும், வேட்பாளர் களை தேர்வு செய்வதிலும் அரசியல்  கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளது.

    இந்த பதவிகளை கைப் பற்ற தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. தி.மு.க. சார்பில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து கட்சி நிர்வாகி களுடன் மத்திய மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன்,  அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் தி.மு.க. கூட்டணியில் இந்த முறை அதிக வார்டுகளை கேட்டு பெற முடிவு செய்யப் பட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 55 வார்டுகளில் 10 வார்டுகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

    குறிப்பாக 15, 22, 32, 33, 34, 38, 43, 47, 49, 53 ஆகிய வார்டுகளை தி.மு.க.விடம் கேட்டு பெற திட்டமிட்டுள்ளதாக காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.

    இதே போல் நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப் பாளையம் ஆகிய 4 மண்டலங்களில் ஒரு தலைவர் பதவியை கேட்கவும் காங்கிரசார் முடிவு செய்தனர்.

    இதே போல் தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் நெல் லை மாநகராட்சி தேர்தலில் குறைந்தபட்சம் 2 வார்டுகளை தி.மு.க.விடம் கேட்டு பெற திட்டமிட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., தமிழ் மாநில காங் கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பா.ஜ.க. சார்பில் எத்தனை வார்டுகளை அ.தி.மு.க.விடம் கேட்கலாம் என கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வரு கிறது.

    அதனைத்தொடர்ந்து மேலிடத்திற்கு அதுகுறித்து அறிக்கை அனுப்பப்பட்டு பின்னர் அவர்களுக்கான வார்டுகள் குறித்து அ.தி.மு.க.வினரிடம் கேட்கப்படும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×