search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் 22 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. நெல்லை மாவட்டம் கடற்கரை பகுதியான ராதாபுரத்தில் 6 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது.
    தென்காசி:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தற்போது குளிர் அதிகம் வாட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது.

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக சிவகிரியில் 41 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 22 மில்லி மீட்டரும், தென்காசியில் 13 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    இதுதவிர அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லி மீட்டர், கருப்பாநதி அணை பகுதியில் 4 மில்லி மீட்டர், சங்கரன்கோவிலில் 2 மில்லிமீட்டர், செங்கோட்டை மற்றும் குண்டாறுபகுதியில் 1 மில்லிமீட்டர் என பரவலாக மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் 22 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. நெல்லை மாவட்டம் கடற்கரை பகுதியான ராதாபுரத்தில் 6 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது.

    மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு கூடுதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அனைத்து அணைகளில் இருந்தும் தொடர்ந்து பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    Next Story
    ×